Saturday, August 16, 2014

இலங்கைத் தமிழர் வரலாறு - தினத்தந்தி வெளியீடு


மாற்றம் செய்த நாள்:
புதன், ஜூலை 09,2014, 3:43 PM IST
பதிவு செய்த நாள்:
வெள்ளி, ஜூன் 27,2014, 1:43 PM IST

‘வரலாற்றுச் சுவடுகள்’ நெடுந்தொடர் தினத்தந்தியில் வெளியானபோது அதில் ஒரு பகுதியாக, ‘இலங்கைத் தமிழர் வரலாறு’ இடம் பெற்றது. அது வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதை நூலாக வெளியிட வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்களும், வாசகர்களும் விரும்பினார்கள். அந்த எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் இப்போது இலங்கைத் தமிழர் வரலாறு 576 பக்கங்கள்கொண்ட வண்ண நூலாக மலர்ந்துள்ளது.

‘வயிற்றுப் பிழைப்புக்காக இலங்கைக்குப் போன தமிழர்கள் தனி நாடு கேட்பது என்ன நியாயம்?’ என்று நம்மில் பலர் கேட்கிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்லும் வகையில், ‘இலங்கையின் பூர்வ குடிகள் தமிழர்கள்’ என்பதை ஆதாரத்துடன் எடுத்துக்காட்டும் அத்தியாயத்தில் தொடங்கி, முள்ளிவாய்க்கால் படுகொலை; இதைத்தொடர்ந்து, ஐ.நா.மனித உரிமைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் வெற்றி; இலங்கையில் நடந்த பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய காமன்வெல்த் மாநாடு; முருகன், பேரறிவாளன், சாந்தன் தூக்குத் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது; ராஜீவ் கொலையாளிகள் 3 நாளில் விடுதலை–ஜெயலலிதா அறிவிப்பு; இதை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு... என்பது வரை இலங்கைத் தமிழர் வரலாற்றை விருப்பு வெறுப்பின்றி நடுநிலையுடனும், ஆதாரப்பூர்வமாகவும் இந்த நூல் எடுத்துக் கூறுகிறது.

சங்க காலத்தைச் சேர்ந்த கரிகால் சோழன் முதல் பிற்கால சோழர்களில் மாமன்னராகத் திகழ்ந்த ராஜேந்திர சோழன் வரை இலங்கைத் தீவை ஆண்ட பெருமை மிகு வரலாற்றை இந்த நூல் எடுத்துரைக்கிறது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதையும், அதை எதிர்த்து தமிழர்கள் அறவழியில் போராடியதையும் இந்த நூல் விவரிக்கிறது.

1977–ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை மாநாட்டில் தமிழீழ தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகள் இயக்கம் உதயமானதையும், ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தில் பிரபாகரன் தலைமையில் இளைஞர்களும், இளம்பெண்களும் வீறு கொண்டு எழுந்து வீரப்போரில் ஈடுபட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் இந்த நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறையில் சிங்களர்கள் வெறியாட்டம்;  இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் நடந்த போராட்டங்கள்; முதல்–அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். ஈழத்தமிழர்களுக்குச் செய்த உதவிகள்; பிரதமராக இருந்த இந்திரா காந்தி இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க மேற்கொண்ட நடவடிக்கைகள்; அதேபோல கலைஞர் கருணாநிதி தலைமையில் டெசோ அமைப்பு நடத்திய போராட்டங்களை இந்த நூல் உரத்துக் கூறுகிறது.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் ஜெயலலிதா பல தீர்மானங்களை கொண்டு வந்து நிறைவேற்றினார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி அவர்களின் விடியலுக்கு வழி வகுத்தார்.  இந்த நிகழ்ச்சிகளையும் இந்த நூல் கூறுகிறது.

இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி–இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா ஆகியோர் செய்து கொண்ட உடன்பாட்டில், பிரபாகரனுக்கு உடன்பாடு இல்லை என்பதையும், அந்த உடன்பாட்டில் கூறப்பட்ட அம்சங்களை ஜெயவர்த்தனா நிறைவேற்ற மறுத்தபோது விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர் திலீபன் ஒரு சொட்டு நீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த நிகழ்ச்சியையும், அதைத் தொடர்ந்து இந்திய அமைதிப்படைக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த  போராட்டத்தையும் இந்த நூல் விளக்குகிறது.

ராஜீவ் காந்தி படுகொலை, தளபதி கிட்டு தற்கொலை போன்ற துயர நிகழ்ச்சிகளையும் இந்த நூல் பதிவு செய்ய தவறவில்லை.

இதன்பின்னர் ராஜபக்சே தலையில் போர் மூண்டதையும், 4 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விடுதலைப்புலிகள் முடக்கப்பட்டதையும், போரின் இறுதிக் கட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதையும், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், அவருடைய மகன் சார்லஸ் அந்தோணி கொல்லப்பட்டதையும், பிரபாகரனின் 12 வயது மகனை சிங்கள ராணுவம் மனித நேயமின்றி சுட்டுக் கொன்றதையும் இந்த நூல் கூறுகிறது.

இது குறித்து உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் வழங்கிய அணிந்துரையில், ‘‘தினத்தந்தி வழங்கியுள்ள இந்த நூல் வரலாற்றுக் கருவூலமாகும். மிகவும் நேர்த்தியாகவும், ஏராளமான படங்களுடனும் கண்ணைக் கவரும் விதத்தில் இந்த நூல் வெளியிடப்பட்டிருப்பது, தினத்தந்தி இதழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. வரலாற்று அறிஞர்கள் பலரைக் கொண்ட குழுவை அரசோ அல்லது பல்கலைக்கழகங்களோ நியமித்து அக்குழு பலமாத காலம் உழைத்து எழுத வேண்டிய இலங்கை தமிழர் வரலாற்றைச் சிறப்பாகத் தொகுத்துத் தந்திருப்பது தினத்தந்தி நாளிதழின் மகுடத்தில் மேலும் ஒளி வீசும் மணிக்கற்களைப் பொதிந்துள்ளது’’ என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

––––––––––––––––

வெளியீடு : தந்தி பதிப்பகம்
86, ஈ.வி.கே.சம்பத் சாலை,வேப்பேரி, சென்னை–7.
போன் : 044-2661 8661 Ext. 336
www.dailythanthi.com 
e mail: mgrthanthipub@dt.co.in
SMS: DTBOOK  SPACE Name to 56060

    Buy Online At: www.ezinemart.com/thanthi.aspx
பக்கங்கள் : 576                   விலை ரூ.360/–

––––––––––––––––

புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள்:     

சென்னை 72999 90399 – 72990 56399  மதுரை 98416 99313  திண்டுக்கல் 98416 99314

திருச்சி 98417 41955 தஞ்சாவூர் 98412 66391 கோயம்புத்தூர் 98417 49153

ஈரோடு 98416 97441 சேலம் 98416 97407 திருநெல்வேலி 98417 49255

நாகர்கோவில்  98416 97408 வேலூர் 98418 20933 கடலூர் 9841742955

புதுச்சேரி 98417 49267 பெங்களூர் 99801 21771 மும்பை 98923 35628

திருப்பூர் 95510 94987

––––––––––––––––

புத்தக மொத்த விற்பனையாளர்களிடமிருந்து ஆர்டர்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புக்கு : 72999 90399
நன்றி :- தினத்தந்தி



No comments:

Post a Comment